உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

திருத்தணி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

திருத்தணி, திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில், நடப்பாண்டு இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி, கல்லுாரி வளாகத்தில் பொறுப்பு முதல்வர் ஏகாதேவசேனா தலைமையில் நேற்று நடந்தது.சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என, மொத்தம் 22 பேர் பங்கேற்றனர். இதில், 14 மாணவர்கள் தேர்வாகினர்.நாளை பொதுப் பிரிவு மற்றும் மதிப்பெண் 'கட்ஆப்' அடிப்படையில், வரும் 6 ம் தேதி வரை பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.ஏ., உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, கல்லுாரி பொறுப்பு முதல்வர் ஏகாதேவசேனா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி