மேலும் செய்திகள்
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
09-May-2026
ஆர்.கே.பேட்டை:அரசுப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையின் போது, விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காததால் விரக்தி அடைந்த மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.பேட்டை அடுத்த கீழ்மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகள் தமிழரசி, 15. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இவர், அம்மையார்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 சேர விரும்பினார். ஆனால், இவர் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காததால், சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தமிழரசி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.கே.பேட்டை போலீசார், தமிழரசியின் சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
09-May-2026