ரயில் மோதி மாணவன் பலி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சாமிரெட்டிகண்டிகை பகுதியில் வசித்தவர் மன்மதன் மகன் பிரசன்னா, 16. அங்குள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2, படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கடைக்கு செல்வதற்காக, ஐ.ஆர்.டி., ரயில்வே கேட் அருகே ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில் மோதி துாக்கி வீசபட்ட அவர், உயிரிழந்தார். விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.