மேலும் செய்திகள்
சாலை விபத்தில் மூதாட்டி பலி
17-Jun-2025
ஆவடி:ஆவடி அருகே வெளிவட்ட சாலையில், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற கல்லுாரி மாணவர், மைல் கல்லில் மோதி பரிதாபமாக பலியானார்.திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை, புலிகட் தெருவைச் சேர்ந்தவர் பிரியாகாந்த், 19; பி.இ., கல்லுாரி மாணவர். இவர், நேற்று மாலை, கல்லுாரி முடிந்து, 'ஹீரோ பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.ஆவடி அடுத்த காட்டூர் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த மைல் கல்லில் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு, மார்பில் அடிபட்ட பிரியாகாந்த், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு, போரூர் தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
17-Jun-2025