உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சகதியாய் மாறிய தார்ச்சாலை திக்குமுக்காடிய மாணவர்கள்

சகதியாய் மாறிய தார்ச்சாலை திக்குமுக்காடிய மாணவர்கள்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தில் இருந்து இலுப்பூர் செல்லும் தார்ச்சாலை, 2 கி.மீ., துாரம் கொண்டது. ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த தார்ச்சாலை 3 ஆண்டுகளாக, ராமாபுரம் பகுதியில் கடுமையாக சேதமடைந்து, பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது.மழைக் காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி விடுவதால், வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பதை அறியாமல் சென்று, விபத்தில் சிக்கி, காயமடைந்து வந்தனர். இதையடுத்து கடந்த வாரம் ஊராட்சி நிர்வாகம் சாலையில் பள்ளம் உள்ள இடங்களில் கிராவல் மண் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தது.நேற்று முன்தினம் இரவு ராமாபுரம் பகுதியில் பலத்த மழை கொட்டித்தீர்தது.இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. கிராவல் மண் கொட்டப்பட்ட சாலையில் வாகனங்கள் சென்றதால் சகதியாக மாறியது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவியர் சகதியான சாலையில் எப்படி நடந்து செல்வது என்று தெரியாமல் தவித்தனர்.சாலையை விரைந்து சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., நகர், துர்கா நகர், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில், தெருச்சாலைகள் சீரமைக்கப்படாததால், மழைநீர் தேங்கி, சகதியாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் பல்வேறு பகுதிகளில் தெருச்சாலை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. தற்போது பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முடிந்த இடங்களில் தெருச்சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.அதே சமயம் மேற்கண்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு, அதற்கான பணிகள் முடிந்த நிலையில், சாலை புதுப்பிக்கப்படாமல் உள்ளது.மழை பெய்தால் தெருச்சாலைகளில் மழைநீர் தேங்கி விடுவதால், குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.மேற்கண்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை