மேலும் செய்திகள்
ரத்ததான முகாம்
10-Mar-2025
திருத்தணி:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலை கல்லூரியில், திருத்தணி ரோட்டரி சங்கம், பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து, நேற்று ரத்ததான முகாம் நடத்தியது.இதில், கல்லூரி முதல்வர் பூரணசந்திரன் தலைமை வகித்தார். பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார ஆய்வாளர் முரளி வரவேற்றார். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி ஆகியோர் பங்கேற்று ரத்ததான முகாமை துவக்கி வைத்தனர்.அதன்பின், டி.எஸ்.பி., கந்தன் பேசியதாவது:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் நடக்கின்றன. இதில், பெரும்பாலான கல்லுாரி மாணவர்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல், 'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனங்களை அசுரவேகத்தில் செல்வதால், அதிகளவில் விபத்துகள் சிக்குகின்றனர்.இதனால், மாணவர்களின் கல்வியும், அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் கொடுக்கும் ரத்ததானம், நாட்டில் பலரது உயிர்களை காப்பாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.முகாமில், 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். அவர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. ரத்ததான முகாமில் சேகரிக்கப்பட்டவை, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
10-Mar-2025