உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம்

சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம்

திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை - மாலை நேரங்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.நேற்று காலை கோவில் வளாகத்தில் உற்சவர் அர்ஜுனன், சுபத்திரை அம்மனுக்கும் திருமணம் நடந்தது. பின், உற்சவர்கள் கோவிலை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை அர்ஜுனன் தபசும், வரும் 1ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி