மேலும் செய்திகள்
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்
23-Mar-2025
திருவள்ளூர்:தேசிய கால்நடை இயக்க தொழில்முனைவோர் திட்டத்தில் கோழி, ஆட்டு பண்ணைகள் அமைக்க அரசு மானியம் வழங்க உள்ளது.திருவள்ளுர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் கால்நடை எண்ணிக்கையை உயர்த்தி, தொழில் முனைவோரை உருவாக்கி, தேசிய கால்நடை இயக்க தொழில் முனைவோர் திட்டத்தில் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.அதன்படி, புதிய கோழி பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றி பண்ணைகளை உருவாக்குவதன் வாயிலாக, இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்க முடியும்.மேலும், புதிய வேலைவாய்ப்பு அதிகரிக்கும் இத்திட்டத்தின் கீழ் நாட்டு கோழி பண்ணையுடன், குஞ்சு பொறிப்பகம் அமைக்க 25 லட்சம், செம்மறி மற்றும் வெள்ளாடு பண்ணை அமைக்க, 10 - 50 லட்சம், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க, 15 - 30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.வைக்கோல், ஊறுகாய் புல், மொத்த கலப்பு உணவு மற்றும் தீவன சேமிப்பு வசதி பண்ணையம் அமைக்கவும் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகவல் பெற, http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அருகில் உள்ள கால்நடை மருத்துவர்கள் மற்றும் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23-Mar-2025