உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனைவருக்கும் வீடு திட்டம்; மானியம் கிடைக்காமல் அவதி

அனைவருக்கும் வீடு திட்டம்; மானியம் கிடைக்காமல் அவதி

பொன்னேரி : பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், கடந்த, 2018 ல், 70 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, தலா, 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இத்தொகையானது, பணி துவங்குவதற்கு முன்,கட்டடம் அடித்தளம் போடப்பட்ட பின், கட்ட டம் லிண்டல் மட்டம்வந்தபின், கான்கிரீட் கூரை அமைத்த பின்,கட்டடத்தின் அனைத்து பணிகளும் முடிந்த பின் என, ஐந்து நிலைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், தங்களுக்கு சொந்தமான இடங்களில் வீடு கட்டுவதற்கான பணிகளைதுவங்கினர்.அரசின் மானிய தொகையுடன், கூடுதல் பரப்பில், தேவையான அளவிற்கு வீடுகளை கட்டும் பணிகளை மேற்கொண்டனர். அரசு அறிவுறுத்திய கட்டுமான பணிகளின் நிலைக்கு ஏற்ப பயனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தொகைகள் கிடைத்தன. அதேசமயம் அடுத்தடுத்த தவணை தொகைகள் கிடைக்கவில்லை. இதனால் கட்டுமான பணிகள் பாதியில் நின்றன.ஒரு சிலர் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு, புதிய வீட்டிற்கான பணிகளை துவங்கியதால், இடமின்றி தவித்தனர். தவணை தொகை கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி, வெளியில் கடன் பெற்று கட்டுமான பணிகளை முடித்து குடி புகுந்தனர்.வெளியில் கடன் பெறுவதற்கு வழியில்லாத பயனாளிகள் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு, வசிக்க வீடு இன்றி தவித்து வருகின்றனர். . தவணை தொகைக்காக நீண்டகாலமாக காத்திருப்பதால், அவற்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ