திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், நடப்பாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு, 2 லட்சம் டன்னாக நிர்ணயித்து கடந்தாண்டு நவம்பரில் அரவை துவங்கி நடந்து வந்தது.பொங்கல் விழாவையொட்டி விவசாயிகளின் கொண்டாட்டத்திற்காக கரும்பு அறுவடை செய்யவில்லை இதனால் ஆலையில் கரும்பு அரவை, கடந்த 13ம் தேதி நிறுத்தப்பட்டது.இதனால் ஆலை வளாகம் கரும்பு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முதல், கரும்பு வரவு துவங்கியது. இதையடுத்து, நேற்று, சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.