உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் அடிபட்டு சர்வேயர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு சர்வேயர் உயிரிழப்பு

கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே ரயிலில் அடிபட்டு சர்வேயர் உயிரிழந்தது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். கடம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராவணன், 34. திருத்தணி தாலுகாவில் சர்வேயராக பணிபுரிந்து வந்தார். சில தினங்களாக திருவள்ளூரில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றார். நேற்று மதியம் தன் வீடு அருகே உள்ள சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் கடம்பத்துார் - செஞ்சிபானம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ