உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஈக்காடு ஊராட்சி தலைவர் மீது ஊழல் புகார் வார்டு உறுப்பினர்களிடம் தாசில்தார் விசாரணை

ஈக்காடு ஊராட்சி தலைவர் மீது ஊழல் புகார் வார்டு உறுப்பினர்களிடம் தாசில்தார் விசாரணை

திருவள்ளூர்:ஈக்காடு ஊராட்சி தலைவர் மீது, சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, திருவள்ளூர் தாசில்தார், வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார்.திருவள்ளூர் அடுத்துள்ளது ஈக்காடு ஊராட்சி. திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட இந்த ஊராட்சி தலைவராக லாசனா, துணை தலைவராக குணசேகர் உள்ளனர்.இந்த ஊராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டு உறுப்பினர்களில் ஒருவர் ஊராட்சி தலைவராகவும், ஒருவர் இறந்து விட்டார்.ஈக்காடு ஊராட்சியில், தலைவர், துணை தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் கூட்டாக இணைந்து நிதி கையாடல், செய்யாத பணிகளை செய்ததாக, திருட்டு கணக்கு எழுதுதல், மன்ற ஆவணங்களில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என, தமிழ்செல்வி உள்ளிட்ட 9 வார்டு உறுப்பினர்கள், கலெக்டர், ஊரக வளர்ச்சி திட்ட கூடுதல் தலைமை செயலர் உள்ளிட்டோரிடம் கடந்த ஆண்டு புகார் மனு அளித்தனர்.இந்த மனு மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று முன்தினம் ஆறு கவுன்சிலர்கள், திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அவர்களை, தாசில்தார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து, நேற்று, தாசில்தார் வாசுதேவன், ஈக்காடு ஊராட்சி அலுவலகத்தில், தலைவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.பின், தாசில்தார் கூறுகையில், 'விசாரணை விபரம் மற்றும் அறிக்கை, கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின், குற்றச்சாட்டுகள் குறித்து, கலெக்டர் முடிவு செய்வார்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி