தாசில்தார் இடமாற்றம்
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி தாசில்தாராக, கடந்த பிப்ரவரி 22ம் தேதி ராஜேந்திரன் பொறுப்பேற்றார். பொறுப்பேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை தாலுகா 'டிட்கோ' சிறப்பு தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார்.கும்மிடிப்பூண்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பொறுப்பு வகிக்கும் புகழேந்தி, தற்போது, கூடுதலாக கும்மிடிப்பூண்டி தாசில்தாராக பொறுப்பு வகித்து வருகிறார்.