உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாவில், ஐந்து தாசில்தார்கள் பணிஇடமாற்றம் செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாவில், தற்போது ஐந்து தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், திருத்தணி தாசில்தாராக பணியாற்றி வந்த மலர்விழி, ஆர்.கே.பேட்டை தாசில்தார் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, கும்மிடிப்பூண்டி, மாநெல்லூர் சிப்காட் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த உமாசங்கரி, திருத்தணி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆர்.கே.பேட்டை தனி தாசில்தாராக பணியாற்றி வந்த தமயந்தி, திருவள்ளூர் தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த மகேந்திரன், கும்மிடிப்பூண்டி, மாநெல்லூர் சிப்காட் அலுவலகத்தில் தனி தாசில்தாராக மாற்றப்பட்டு உள்ளார். கும்மிடிப்பூண்டி, மாநெல்லூர் சிப்காட் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிந்து வரும் சங்கமித்திரா, கூடுதல் பொறுப்பாக கும்மிடிப்பூண்டி, மாநெல்லூர் சிப்காட் அலுவலகத்தில் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை