உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழிற் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் முதல்வராக பணியாற்றி வந்த டி.ஐ.ஜி., யாமினி பிரியா, உத்திர பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு நிபுணத்துவம் பெற்ற மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் சிறப்பு பாதுகாப்பு குழுவிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, மத்திய தொழிற் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தின் புதிய முதல்வராக டி.ஐ.ஜி., சரோஜ் காந்த் மல்லிக் நேற்று, பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை