டாஸ்மாக் விற்பனையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருவள்ளூர்:மயங்கி விழுந்த டாஸ்மாக் விற்பனையாளர் உயிரிழந்தது குறித்து திருவள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 46, டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையானதால் மனைவி இவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜ் வயிறு வலிப்பதாக கூறி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது சகோதரர் விஜயன் நாகராஜை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்த நாகராஜ் மயங்கி கீழே விழுந்தார். நாகராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஜயன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்துவிசாரித்து வருகின்றனர்.