மேலும் செய்திகள்
மணப்பட்டு தாங்கல் ஏரி: துார்வார நடவடிக்கை தேவை
21-Oct-2025
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளையத்தில், நாகன் தாங்கல் ஏரி உள்ளது. இதை, டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், துார் வாரி சீரமைத்துள்ளது. நாகன் தாங்கல் ஏரி, 15 ஏக்கர் பரப்பளவு உடையது. இது, 2,800 கிராம மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது. பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் இருந்ததால், வண்டல் மண் படிந்து, மாசுபட்டது. இதனால் அதன் கொள்ளளவு, 75 சதவீதம் குறைந்தது. அந்த ஏரியை, டாடா கம்யூனிகேஷன்ஸ், 'புராஜக்ட் நன்னீர்' எனும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைத்துள்ளது. ஏரியின் நான்கு மீட்டர் பரப்பளவுக்கு, 1.50 மீட்டர் ஆழம் வரை துார் வாரப்பட்டு, வண்டல் நீக்கப்பட்டது. சீரமைப்புக்கு முன், 26 லட்சம் லிட்டராக இருந்த நீர் சேமிப்பு தற்போது, 85 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. நீர் பரவியிருக்கும் பரப்பளவும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம், பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் இருந்த நாகன் தாங்கல் ஏரி, பல்லுயிர்களுக்கான செழிப்பான சுற்றுச்சூழலையும், மக்களுக்கு நீர்வள ஆதாரமாகவும் புத்துயிர் பெற்றுள்ளது.
21-Oct-2025