உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நண்பரை தாக்கிய வாலிபர் கைது

நண்பரை தாக்கிய வாலிபர் கைது

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் ஊராட்சி புதிய காலனியை சேர்ந்தவர் சுதாகர், 42. இவரும் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ், 38 நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர்.இருவரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சரண்ராஜ் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் சுதாகரை தாக்கியுள்ளார். காயமடைந்த சுதாகர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருவாலங்காடு போலீசார் சரண்ராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை