மேலும் செய்திகள்
நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய நாய்கள்
10-Nov-2025
அம்பத்துார்: அம்பத்துார், அத்திப்பட்டு, ஐ.சி.எப்., காலனி பகுதியைச் சேர்ந்த, 19 வயது வாலிபர், வடபழனியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். இவருடன் பள்ளியில் பயின்ற தோழிக்கும், இவருக்கும் இடையே, கடந்த ஒரு வாரமாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால், தோழி, வாலிபருடன் பேச மறுத்துள்ளார். மன உளைச்சலில் இருந்த வாலிபர், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டியுள்ளார். அவரது பெற்றோர் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தகவலறிந்து சென்ற அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
10-Nov-2025