உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரியில் இறுதி கட்டத்தை எட்டிய கோவில் குளம் சீரமைப்பு பணிகள்

சிறுவாபுரியில் இறுதி கட்டத்தை எட்டிய கோவில் குளம் சீரமைப்பு பணிகள்

கும்மிடிப்பூண்டி:ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த சிறுவாபுரி கோவில் குளம் சீரமைப்பு பணிகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் குளம் அமைந்துள்ளது.இந்த குளத்தை சீரமைக்க, 2023 ஆகஸ்ட் மாதத்தில், 3.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால், புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 2023 டிசம்பர் மாதம் பணிகள் துவங்கப்பட்டன.குளத்தை ஆழப்படுத்தி, புதிய படித்துறைகள் அமைத்து, சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவர் அமைத்தல், சுற்றுச்சுவர் மீது இரும்பு தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இடம் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல்களால் மீண்டும் முடங்கியது. ஓராண்டுக்கு முன் மீண்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், தற்போது குளத்தின் சுற்றுச்சுவருக்கு பெயின்ட் அடிக்கும் இறுதிகட்ட பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை