மதுக்கூடமான நெற்களம்
வெள்ளேரிதாங்கல்:கடம்பத்துார் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் நெற்களம் இல்லாமல் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த 2021-22ம் ஆண்டு 7.21 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நெற்களம் அமைக்கப்பட்டது.தற்போது, இந்த நெற்களத்தை 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றி விட்டனர். எனவே, நெற்களத்தை சீரமைத்து, சுற்றி வேலி அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.