மேலும் செய்திகள்
போக்குவரத்துக்கு லாயக்கற்ற தேர்வாய்கண்டிகை சாலை
31-Jul-2025
கும்மிடிப்பூண்டி:போந்தவாக்கம் - பல்லவாடா இடையிலான சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்று, குண்டும், குழியுமாக இருப்பதால், உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள பல்லவாடா கிராமத்தில் இருந்து போந்தாவாக்கம் கிராமம் வரை 2.4 கி.மீ., சாலை உள்ளது. நபார்டு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இச்சாலையை மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமான நிலையில், சாலை முழுதும் குண்டும், குழியுமாக உள்ளது. அவசர தேவைக்கு இச்சாலையை பயன்படுத்த முடியாமல், போந்தவாக்கம் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, போந்தவாக்கம் கிராம மக்களின் நலன் கருதி, சாலையை உடனடியாக சீரமைக்க மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31-Jul-2025