உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண்டபம் கட்டும் பணி 12 ஆண்டுகளாக பாராமுகம்

மண்டபம் கட்டும் பணி 12 ஆண்டுகளாக பாராமுகம்

கடம்பத்துார், செல்லியம்மன் கோவில் பொங்கல் மண்டபம் கட்டும் பணி, 12 ஆண்டுகளாகியும் நிறைவடையாததால், பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 2013ம் ஆண்டு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பொங்கல் மண்டபம் கட்டும் பணி துவங்கியது.தற்போது, 12 ஆண்டுகளாகியும் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொங்கல் மண்டப பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், விழாக்காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பொங்கல் மண்டபம் கட்டும் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென,திருப்பந்தியூர் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை