உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிகிச்சைக்கு சென்ற போது மயங்கி விழுந்த மருத்துவர் பலி

சிகிச்சைக்கு சென்ற போது மயங்கி விழுந்த மருத்துவர் பலி

திருவள்ளூர் : திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 51. அமெரிக்கா லாஸ்வேகாஸ் மகாணத்தில், தனியார் மருத்துவமனை மருத்துவராக, கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி, தனது தாயாரை பார்க்க, திருச்சியில் உள்ள சகோதரர் பாலசுப்பிரமணி என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். பின், கடந்த செப்., 22ம் தேதி, திருவள்ளூர், காக்களூர் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு, விடுமுறை நாட்களை கழிக்க வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்கா புறப்பட வேண்டிய நிலையில், கடந்த 27ம் தேதி, சென்னை பாடியில் உள்ள தனியார் ஹெல்த் கேர் லேப்பிற்கு உடல் பரிசோதனைக்கு சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார்.இதையடுத்து, அவருக்கு செரியன் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின் சென்னை கே.எம்.சி., மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி