உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மரக்கிளையில் உரசிய பஸ் கண்ணாடி உடைந்தது

மரக்கிளையில் உரசிய பஸ் கண்ணாடி உடைந்தது

திருவாலங்காடு:திருவள்ளூர் -- திருவாலங்காடு வரை இயக்கப்படும் தடம் எண்: டீ 2 அரசு பேருந்து மணவூர் வழியாக செல்கிறது. இந்த பேருந்து நேற்று காலை, 9:00 மணியளவில், 15 பயணியருடன் மணவூர் வழியாக திருவாலங்காடு நோக்கி சென்றது.மணவூர் காலனி அருகே சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் கிளை பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் உரசியது. இதில் கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர், பயணியர் உட்பட அனைவரும் காயமின்றி தப்பினர். பயணியர் மாற்று பேருந்தில் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை