உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தலையை பதம் பார்க்க துடிக்கும் கனகம்மாசத்திரம் பயணியர் நிழற்குடை

தலையை பதம் பார்க்க துடிக்கும் கனகம்மாசத்திரம் பயணியர் நிழற்குடை

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் அமைந்துள்ளது பயணியர் நிழற்குடை.இப்பகுதிவாசிகள் திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த நிழற்குடை, ஆங்காங்கே விரிசல் விட்டு, கூரையின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால் நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர்.மேலும் வெயில், மழைக்கு ஒதுங்ககூட பயன்படாத நிழற்குடையாக மாறி வருகிறது. எனவே இந்த நிழற்குடையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை