உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் மேல்நிலை தொட்டி படுமோசம்

ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் மேல்நிலை தொட்டி படுமோசம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் ஊராட்சி, சி.எச்.அக்ரஹாரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 2012 - 13ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 5 லட்சம் ரூபாயில், 10,000 லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.இந்த குடிநீர் தொட்டியை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், மூன்று ஆண்டுகளுக்கு முன், தொட்டியின் மேல்தளம் மற்றும் துாண்கள் சேதமடைந்தது. இதை தொடர்ந்து, ஒன்றிய நிர்வாகம் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி, பயன்பாட்டிற்கு விட்டது.ஆனால், இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றாமல், ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. இந்த தொட்டி இடிந்து விழுந்தால் கோவில் மற்றும் வீடுகள் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.மேலும், உயிர்பலி ஏற்படும் அபாயமும் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் பயன்பாடின்றி உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி