மேலும் செய்திகள்
9 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
06-Oct-2024
சோழவரம்:வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில், செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று மதியம், சோழவரம் டோல்கேட் பகுதியில் இன்ஸ்பெக்டர் மலர்செல்வி தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஜெயேஷ், 40, என்பதும் வேலைக்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருவதும் தெரிந்தது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது, அதில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.இவை ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்தது விசாரணையில் தெரிந்தது. அதையடுத்து ஜெயேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்த, கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
06-Oct-2024