திறப்பு விழா காணாத ரேஷன் கடை ஓராண்டாகியும் வீணாகும் அவலம்
ராமன்கோவில்:கடம்பத்துார் ஒன்றியம் ராமன்கோவில் ஊராட்சி மக்கள், ரயில்வே தண்டவாளத்தை தாண்டி, அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். ஆபத்தான முறையில் ரயில்வே தண்வாளத்தை கடந்து செல்வதால், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்தும் வந்தனர். கடந்த 2024 - 25ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 12.70 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டடம் கட்பட்டது. இந்த கட்டடம் கட்டப்பட்டு ஓராண்டாகியும், தற்போது வரை திறப்பு விழா நடத்தாததால் வீணாகி வருகிறது. இதனால், பகுதிமக்கள் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாள பகுதியை கடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் நலன் கருதி, புதிய ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, ராமன்கோவில் பகுதிமக்கள் கோரிகை்கை விடுத்துள்ளனர்.