உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜல்லி கற்களாக மாறிய சாலை முருக்கம்பட்டு மக்கள் அச்சம்

ஜல்லி கற்களாக மாறிய சாலை முருக்கம்பட்டு மக்கள் அச்சம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு ஊராட்சியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 135.22 கோடி ரூபாய் மதிப்பில், 1,040 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.முருக்கம்பட்டு கிராமத்தில் இருந்து இக்குடியிருப்புகளுக்கு, 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். இதில், 1 கி.மீ., துாரத்திற்கு ஒன்றிய நிர்வாகம் சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள 1 கி.மீ., துாரத்திற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இச்சாலையை முறையாக பராமரிக்காததால், தற்போது சாலை முழுதும் பெயர்ந்து, ஜல்லி கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வழியாக முருக்கம்பட்டு மக்கள், தங்களது வயல்வெளிக்கு சென்று வருகின்றனர்.மேலும், விவசாய தானியங்களை டிராக்டர், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் இச்சாலை வழியாக கொண்டு வருகின்றனர். இதுதவிர, புதிதாக கட்டியுள்ள, 1,040 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கும், இச்சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சிலர் காயமடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, முருக்கம்பட்டு பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ