உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் உருவாகிய சிறு குளங்கள் நெ.சா.துறை அதிகாரிகள் பாராமுகம்

சாலையில் உருவாகிய சிறு குளங்கள் நெ.சா.துறை அதிகாரிகள் பாராமுகம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் இருந்து, அரசூர் செல்லும் சாலையில் மேலப்பட்டறை, கொள்ளுமேடு, கொக்குமேடு, அண்ணாநகர், விடதண்டலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.மெதுார் - அரசூர் இடையேயான, 5 கி.மீ., சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை முழுதும் சரளைகற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியமாக உள்ளது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மெதுார் மற்றும் பொன்னேரி வந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இச்சாலை, 10 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலையை சீரமைக்கக்கோரி, கடந்த ஜனவரி மாதம் இநுது கிராமங்களை சேர்ந்தோர் மறியல் போராட்டம் நடத்தியும் இதுவரை தீர்வு இல்லை.மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருந்த இச்சாலை, 2022ல் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் இதர மாவட்ட சாலைகள் பிரிவில் சேர்க்கப்பட்டது.எனவே உடனடியாக சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை