உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாடில்லாத கழிப்பறை மதுக்கூடமாக மாறிய அவலம்

பயன்பாடில்லாத கழிப்பறை மதுக்கூடமாக மாறிய அவலம்

திருவள்ளூர்'பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ள கழிப்பறை பயன்பாடில்லாமல் மூடிக் கிடப்பதால், மதுக்கூடமாக மாறி வருகிறது.திருவள்ளூர் நகராட்சியில், திரு.வி.க., பேருந்து நிலையம், பெரியகுப்பம் பேருந்து நிலையம், குளக்கரை தெரு, தேரடி உளிளிட்ட குடியிருப்பு பகுதிகளில், 12க்கும் மேற்பட்ட பொது கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. அதே போல, பெரியகுப்பத்தில் இருந்து, ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள, மேம்பாலம் கீழ் பகுதியிலும் ஒரு கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது.இதை ரயில் நிலையம் செல்வோர், அப்பகுதிவாசிகள் மற்றும் மேம்பாலம் அருகில் வசிக்கும் நரிக்குறவர்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக இந்த கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் மூடப்பட்டு உள்ளது. இதனால், பெரியகுப்பம் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும், ரயில் பயணியரும் இயற்கை உபாதை கழிக்க வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானம் வாங்கி வருவோர், கழிப்பறையின் படிக்கட்டு மற்றும் அதன் அருகில் அமர்ந்து மதுக்கூடமாக மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வழியாக பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.எனவே, நகராட்சி நிர்வாகம் மூடப்பட்டுள்ள கழிப்பறையை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ