உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறக்காத ஊராட்சி அலுவலகம் மதுக்கூடமாக மாறிய அவலம்

திறக்காத ஊராட்சி அலுவலகம் மதுக்கூடமாக மாறிய அவலம்

கண்ணுார்: ஊராட்சி அலுவலகம் பூட்டியே கிடப்பதால், 'குடி'மகன்கள் மதுக்கூடமாக மாற்றி வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்தில் கண்ணுார் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட கண்ணுார், கண்ணுார் காலனி, அரையவாககம், தென்னகரம் போன்ற கிராம மக்கள், இந்த ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக, ஊராட்சி அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை பயன்படுத்தி, 'குடி'மகன்கள் சிலர் ஊராட்சி அலுவலகத்தை மதுக்கூடமாக மாற்றி வருகின்றனர். இது, அப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊராட்சி அலுவலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை