உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடை புலனாய்வு அலுவலகம் மதுக்கூடமாக மாறிய அவலம்

கால்நடை புலனாய்வு அலுவலகம் மதுக்கூடமாக மாறிய அவலம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ளது, போளிவாக்கம் ஊராட்சி. இப்பகுதியில் 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டடத்தை, 2018 ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார். நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், ‛குடி' மகன்கள் ஆக்கிரமித்து, மதுக்கூடமாக மாற்றி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, பாதுகாவலர் நியமனம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை