உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுக்கடைக்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படும் அவலம்

மதுக்கடைக்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படும் அவலம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டையில் இருந்து, கீழப்பூடி செல்லும் சாலையில், டாஸ்மாக் கடை, மதுகூடத்துடன் செயல்பட்டு வருகிறது.இங்கு மது அருந்த இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால், அந்த வழியாக செல்லும் கீழப்பூடி, காவேரிராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்த வழியாக தான் பொதட்டூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.மேலும், குறுகலான மற்றும் ஏராளமான திருப்பங்களை கொண்ட இந்த சாலை வழியாக வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டிவரும் மதுபிரியர்களால் விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது.மதுஅருந்திவிட்டு இருசக்கர வாகனங்களில் இருந்த வழியாக வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி