உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரை வஞ்சிவாக்கம் கிராமத்தினர் தவிப்பு

குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரை வஞ்சிவாக்கம் கிராமத்தினர் தவிப்பு

பொன்னேரி,:மீஞ்சூர் ஒன்றியம் வஞ்சிவாக்கம் கிராமத்தில் குளம் அமைந்துள்ளது. இதில் தேங்கும் மழைநீர், கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகிறது. கால்நடைகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.இந்நிலையில், குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், கரைகளில் செடி, கொடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது. குளத்தில் தண்ணீர் இருந்தும், அதை கிராமவாசிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:மழைக்காலங்களில் குளத்தில் மழைநீரை முழுமையாக தேக்கி வைத்து, பல்வேறு வீட்டு தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் அதை பயன்படுத்தி வந்தோம். தற்போது, ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளதால், அங்கு செல்லவே முடியவில்லை.மேலும், நீர்நிலைகளை பராமரிப்பதில் ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை