உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடிந்து விழும் அபாய நிலையில் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர்

இடிந்து விழும் அபாய நிலையில் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் எதிரே பரந்து விரிந்து காணப்படும் குளம், பக்தர்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை, பக்தர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி, முருகனை வழிபட்டு வந்தனர். அதன்பின், முறைான பராமரிப்பின்றி கோவில் குளம் சீரழிந்து வருவதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். குளத்தின் தெற்கு பகுதி சுற்றுச்சுவர், தொடர் மழையின் போது முற்றிலும் இடிந்து விழுந்தது. மீதமுள்ள சுவரும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. குறிப்பாக, கிழக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், குளத்தின் உட்பகுதியில் செடிகள் வளர்ந்தும், குப்பைகள் சூழந்தும் காணப்படுகிறது. எனவே, ஞானவேல் முருகன் கோவில் குளத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை