உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மனைவி பலி கணவர் மர்மச்சாவு

மனைவி பலி கணவர் மர்மச்சாவு

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம், வளர்புரத்தை சேர்ந்தவர் விஜயன், 50. இவரது மனைவி மீனாட்சி, 45; அங்கன்வாடி பணியாளர். இவரது மகள் பவித்ரா, 24, மகன் யுவனேஷ், 20. கடந்த, 7ல் மீனாட்சி, பவித்ரா, யுவனேஷ் ஆகியோர் வீட்டில் இறந்து கிடந்தனர். விஜயன் தலைமறைவானார். அவரை அரக்கோணம் டவுன் போலீசார் தேடினர்.நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் - திருத்தணி ரயில்வே பாதையில், இச்சி புத்துார் ஸ்டேஷன் அருகே ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அரக்கோணம் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், விஜயன் என தெரிந்தது. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா, ரயிலில் அடிபட்டு இறந்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை