மேலும் செய்திகள்
பதுக்கி வைத்து மது விற்றவர் கைது
08-Oct-2024
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் உள்ள மண்ணடி தெருவில், அரசு மதுக்கடை இயங்காத காலை நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்பகுதியைச் சேர்ந்த ஜானகி, 45, என்ற பெண், அவரது வீட்டின் அருகே, மது விற்பனை செய்து கொண்டிருந்தார்.அவரை கைது செய்த போலீசார், 28 குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
08-Oct-2024