மேலும் செய்திகள்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
18-Oct-2024
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே கொட்டகை அமைத்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செடிகள் வளர்த்தல் பணி நடந்து வருகிறது.இதில் 4 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புங்கை, சீத்தா, நெல்லி உள்ளிட்ட விதைகள் குடுவையில் அடைத்து கொட்டகையில் வைத்து செடிகள் வளர்க்கப்படும். தற்போது 1,000 செடிகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது . 30 நாட்கள் ஆனதும் விதைகள் செடிகளாய் முளைக்கும்.பின் ஊராட்சியில் உள்ள சாலையோரங்கள், அரசுக்கு சொந்தமான இடங்களில் நடப்படும். மேலும் வீடுகளில் மரம் வளர்க்க ஆர்வமுள்ள ஊராட்சியை சேர்ந்த ஆர்வலர்கள் வந்து பெற்று செல்லலாம் என ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-Oct-2024