உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ஜெ.ஜெ.கார்டன் மக்கள் கடும் அவதி

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை ஜெ.ஜெ.கார்டன் மக்கள் கடும் அவதி

திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார் கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் அமைந்துள்ள இந்த நகரில், 60க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடிபெயர்ந்துள்ளனர். மேலும், புதிதாக பல வீடுகள் இங்கு கட்டப்பட்டு வருகிறது.சிறுவானுார் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த நகரில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இந்த நகரில், இரண்டு இடத்தில் குடிநீர் தொட்டி அமைத்தும், இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. கோடை காலத்தில், குடிநீர் கிடைக்காமல், தண்ணீர் கேன்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.சாலை வசதி இல்லாததால், மழை காலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி, நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில், பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகள் இல்லாததால், இருளில் மூழ்கியுள்ள இந்த நகரில், பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.எனவே, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள், ஜெ.ஜெ.கார்டனில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு, மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை