மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
29-Mar-2025
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தேவநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், பங்குனி மாதம் நடைபெறும் உத்திர திருவிழா சிறப்பு வாய்ந்தது.நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு, சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முன்னதாக, கிராம தேவதை காவாத்தம்மன் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசை, பழ வகைகள் ஆகியவற்றை ஊர்வலம் எடுத்து வந்தனர். அதன்பின், கைலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
29-Mar-2025