உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாஸ்மாக் கடை திறக்க திருமழிசை மக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக் கடை திறக்க திருமழிசை மக்கள் எதிர்ப்பு

திருமழிசை:திருமழிசை பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். தி ருமழிசை குண்டுமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கிழக்கு மண்டல டாஸ்மாக் துணை மேலாளர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் குண்டுமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க இன்ஸ்பெக்டர்கள் பூந்தமல்லி அழகேசன், நசரத்பேட்டை சாய்கணேஷ் மற்றும் வெள்ளவேடு போலீசாருடன் வந்தனர். தகவலறிந்த திருமழிசை பேரூராட்சி 14, 15வது வார்டு அ.தி.மு.க., உறுப்பினர்களான பிரதீப், வேலு தலைமையில் 100க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் அப்பகுதியில் குவிந்து டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் புதிய டாஸ்மாக் கடை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை