திருத்தணி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு
திருத்தணி, முருகன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக, இரண்டாவது முறையாக ஸ்ரீதரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். திருத்தணி முருகன் கோவிலுக்கு, கடந்த வாரம் புதிய அறங்காவலர் உறுப்பினர்களாக ஸ்ரீதரன், சுரேஷ்பாபு, மோகன், நாகன் மற்றும் உஷா ரவி ஆகியோரை, ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் நியமனம் செய்தார். நேற்று திருத்தணி முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில், அறங்காவலர் குழு தலைவருக்கான மறைமுக தேர்தல், இணை ஆணையர் ரமணி முன்னிலையில் நடந்தது. இதில், அறங்காவலர் குழுத் தலைவராக ஸ்ரீதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று இரண்டாவது முறையாக அறங்காவலர் குழு தலைவராக ஸ்ரீதரன் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய அறங்காவலர் குழுத் தலைவருக்கு, இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, மோகன், உஷா ரவி, நாகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.