திருத்தணி நகராட்சி கூட்டம்
திருத்தணி:திருத்தணி நகராட்சி கூட்டம் துணை தலைவர் சாமிராஜ் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். நகராட்சியில், 68.50 லட்சம் ரூபாயில், முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்திற்கு அறிவுறுத்தல் உள்பட, 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருத்தணி சிட்டி யூனியன் வங்கி சார்பில், நகராட்சி பகுதியில் குப்பை அள்ளுவதற்கு, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி ஆணையர் பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டனர்.