உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்களால் கடும் நெரிசல்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்களால் கடும் நெரிசல்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், முருகன் மலைக்கோவிலுக்கு அதிகாலை 5:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும், பெரும்பாலான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் மூலம் மலைக்கோவிலுக்கு வந்தனர். இதனால், சிலர் தங்கள் வாகனங்களை மலைப்பாதை ஓரம் நிறுத்திவிட்டு சென்றதால், இரண்டு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர, மலைக்கோவில் தேர்வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால், பொதுவழியில் மூன்றரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் தங்கத்தேரில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை