உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடு வாலிபர் கொலை போதை நண்பருக்கு மாவுக்கட்டு

திருவாலங்காடு வாலிபர் கொலை போதை நண்பருக்கு மாவுக்கட்டு

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ், 19. கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர் திரும்பவில்லை.நேற்று முன்தினம் காலை, திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தில் இருந்து கூடல்வாடி செல்லும் சாலையில் பாலம் அருகே, உடலில் 20 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் தலைமையிலான திருவாலங்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்த லோகேஷின் நண்பரான ஜெகன், 20, உட்பட ஐந்து பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில், ஜெகனுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:லோகேஷை பூண்டியில் இருந்து தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். இருவரும் நார்த்தவாடா கிராமத்தில் பாலம் அருகே மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, லோகேஷ் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், கத்தியை பிடுங்கி சரமாரியாக லோகேஷை வெட்டிக் கொலை செய்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதன்பின், ஜெகனை நீதிமன்றனத்தில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து, ஜெகனை கொலை நடந்த இடத்திற்கு போலீசார் நேற்று அழைத்து சென்றனர்.அப்போது, போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று ஓடியபோது, கால் தவறி கிழே விழுந்தார். இதில், வலது கை உடைந்தது. பின், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ