உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குப்பையில் தயாரான உரம் கிலோ ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு திருவள்ளூர் நகராட்சி அழைப்பு

குப்பையில் தயாரான உரம் கிலோ ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு திருவள்ளூர் நகராட்சி அழைப்பு

திருவள்ளூர்,:திருவள்ளூர் நகராட்சியில் கிடைக்கும், மக்கும் குப்பையை , திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது உள்ள, 20,000 கிலோ உரத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்ள, நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 19,022 வீடுகளில் 82,185 பேர் வசிக்கின்றனர். தினமும், 25 டன் குப்பை சேருகிறது. இதில், 13 டன், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பையும், 11 டன் மக்கும் குப்பை கிடைக்கிறது. இந்த குப்பையை தனியார் நிறுவன துப்புரவு ஊழியர்கள், 114 பேர் வீடு தோறும் சென்று, தரம்பிரித்து பெற்று வருகின்றனர்.பெறப்படும் குப்பையை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள 16 உரக்குடில்களில், மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. அவற்றில், மக்காத குப்பையை , ஈக்காடு மற்றும் நுங்கம்பாக்கம் கிராமத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரமாக்கப்பட்டு வருகிறது.அங்கு குப்பையை உலர்த்தி, துண்டு, துண்டாக மாற்றப்பட்டு, அதன் பின், இங்கு கட்டப்பட்டுள்ள, 30 தொட்டிகளில் கொட்டப்படுகிறது. உரமாக மாற்ற, 'இஎம்' சொல்யூஷன் தெளிக்கப்படுகிறது. 45 நாட்களில், குப்பை உரமாக மாறிவிடும்.42 ஆயிரம் கிலோ உரம்தற்போது, ேஹாட்டல்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும், மக்கும் குப்பைகளை, அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட, உரக்குடில்களில், பிரிக்கப்பட்டு, இயற்கை உரமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஈக்காடு மற்றும் நுங்கம்பாக்கத்திலும், சேர்த்து மொத்தம், 42,000 கிலோ குப்பை தயாராகி உள்ளது. இந்த குப்பையால் உருவான இயற்கை உரத்தை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கும் ஒரு கிலோ உரம், ஒரு ரூபாய் என்ற விலையில், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் தாமோதரன், சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:திருவள்ளூர் நகராட்சியில், 40,000 கிலோ இயற்கை உரம் உள்ளது. 20,000 கிலோ உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள உரத்தையும் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.500 அபராதம்

கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சியில் மாவட்டத்தில் முதல் முறையாக குப்பையை தரம் பிரிக்காமல் வழங்கும் வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது அபாரதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 விதி 110-ன் கீழ் தரம் பிரிக்காமல் குப்பைகளை வழங்கும் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டும் என, துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.மாவட்டத்தில் முதல் முறையாக வெங்கத்துார் ஊராட்சியில், தரம் பிரிக்காமல் குப்பை வழங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என, ஒன்றிய அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை