உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புச்சிரெட்டிப்பள்ளி கிளை நுாலகத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்செடிகள்

புச்சிரெட்டிப்பள்ளி கிளை நுாலகத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்செடிகள்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளியில் பேருந்து நிறுத்தம் அருகே கிளை நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகம் உள்ளது.மேலும், தினசரி நாளிதழ், வார இதழ், மாத இதழ் போன்ற புத்தகங்களும் கிளை நுாலகத்திற்கு வருவதால், தினமும், 50க்கும் மேற்பட்ட வாசகர்கள் நுாலகத்திற்கு வந்து படித்து வருகின்றனர்.வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும். இந்த நுாலகத்திற்கு இளைஞர்கள் முதல், முதியோர்கள் வரை வந்து வாசித்துவிட்டு செல்கின்றனர்.இந்நிலையில், நுாலக கட்டடம் பழுதடைந்தும், கட்டடத்தை சுற்றியும் செடிகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் அடிக்கடி நுாலகத்திற்கு வந்து விடுவதால் வாசகர்கள் அச்சம் அடைகின்றனர்.மேலும், கிளை நுாலகம் பின்புறம் கழிவுநீர் குட்டை உள்ளதால், துர்நாற்றம் வீசுவதால் வாசகர்கள் நிம்மதியாக படிக்க முடியவில்லை.எனவே, கிளை நுாலகத்தை சுற்றி வளர்ந்துள்ள செடிகளை அகற்றி துாய்மைப்படுத்த வேண்டும். மேலும் கட்டடத்தையும் சீரமைக்க வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை