உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் குளத்தை மீட்க தியாகபுரம் வாசிகள் மனு

கோவில் குளத்தை மீட்க தியாகபுரம் வாசிகள் மனு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கதனநகரம் மற்றும் தியாகபுரம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஸ்ரீ பங்காரு அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலின் தீர்த்தக்குளம் மற்றும் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என, அரசு ஆவணத்தில் பதிவாகி இருந்தது. தற்போது, அரசின் 'யூ.டி.ஆர்.,' கணக்கில் நில அளவு செய்த போது தவறுதலாக, 16 பேருக்கு பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, கோவிலுக்கு சொந்தமான குளம் மற்றும் நிலத்தை பட்டா பதிவு செய்திருப்பதை ரத்து செய்து, மீண்டும் கோவில் குளம் மற்றும் நிலத்தை மீட்டு தருமாறு கிராமவாசிகள், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனுவை பெற்ற கலெக்டர், 'விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ